www.garudabazaar.com

கலர்ஃபுல் ‘ஆடையில்’ தெறிக்கவிடும் நடிகை அமலா பால் .. Trend ஆகும் மிரட்டலான புதிய ஃபோட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.

what is goddess? amala paul new hot trending photos

பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் மைனா எனும் கேரக்டரில் நடித்த அமலா பால் அப்பாவித்தனமான கேரக்டரில் நடித்ததை அடுத்து பாராட்டுகளைப் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிகை அமலா பால் முன்னணி நடிகர்களான தளபதி விஜய், நடிகர் தனுஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக தளபதி விஜய்யுடன் அமலா பால் தலைவா திரைப்படத்திலும், இதேபோல் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் அமலாபால் நடித்திருந்தார்.

தொடர்ந்து பெண் மையக் கதாப்பாத்திரங்களுக்கான கதைகளிலும் கவனம் செலுத்திய அமலா பால், அம்மா கணக்கு, ஆடை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பாராட்டுக்கள் குவித்தார். இதனிடையே நடிகை அமலா பால் அண்மையில் நடித்த ‘குடியெடமைதே’ என்கிற திரைப்படம் தெலுங்கில் பிரபலமான ஓடிடி தளமான ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், அண்மையில் தனது சகோதரரின் திருமணத்தை ஒட்டி நடந்த பார்ட்டியில் அமலா பால் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் அந்த பார்ட்டியில் அமலா பால் டான்ஸ் ஆடிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து அமலா பாலின் மற்றுமொரு புதிய கவர்ச்சிகரமான ஃபோட்டோஷூட் வெளியாகி இருக்கிறது.

அதன்படி, இன்ஸ்டாகிராமில், அமலா பால் கிட்டத்தட்ட நீச்சலுடையில் ஆடையணிந்து பீச் ரிசார்ட் மாதிரி இருக்கும் ஒரு இடத்தில் நின்று ஃபோட்டோஷூட்க்கு போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த ஃபோட்டோவை அமலா பால் தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து, ஒரு முக்கியமான கேப்ஷனையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

அதில், “தெய்வம் என்பது என்ன? மனதின் உடல் மற்றும் ஆவியின் அனைத்து நிலைகளிலும் தன்னை அறியவும், ஏற்றுக்கொள்ளவும், நேசிக்கவும் கற்றுக்கொள்ளும் ஒரு பெண். தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் சுய விழிப்புணர்வுகளில் கவனம் செலுத்துவதால், அமைதி, அன்பு, மகிழ்ச்சி, பேரார்வம் மற்றும் வேடிக்கை நிறைந்த ஒரு வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரு பெண்.

தன் வாழ்க்கையை தான் விரும்பும் எதையும் செய்வதற்கான திறன் கொண்டவள் என்பதை புரிந்துகொள்ளும் ஒரு பெண். தன் நன்றியுணர்வு மற்றும் அதீத தன்மையால், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு பெண்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் கமெண்டுகளை தெரிவித்துள்ளனர்.

Also Read: "போடு வெடிய".. விஜய்யின் "தளபதி66" படம்.. வந்தாச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

what is goddess? amala paul new hot trending photos

People looking for online information on Amala Paul, Trending will find this news story useful.