www.garudabazaar.com

கன்னத்தை கடித்து பாராட்டு!.. களைகட்டும் ப்ரொபோஸல்!.. கலக்கும் 'அக்கட தேச' Reality ஷோக்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சேனல் ஒன்றின் நடன நிகழ்ச்சியில் நடிகைகள் பிரியாமணி, பூர்ணா, ராஷ்மி கவுதம் ஆகியோர் நடுவராகப் பங்குபெறுகின்றனர். 

Poorna and Rashmi Gautam viral telugu reality shows trending

இவர்கள் மூவருமே தமிழிலும் நடித்த பிரபலமான நடிகைகள் தான். இதில் நடிகை பூர்ணா இந்த நிகழ்ச்சியின் நடன போட்டியாளர் ஒருவரைப் பாராட்டி முத்தமிட்டதுடன், அவரது கன்னத்தையும் செல்லமாக கடித்து வைத்தார். இந்த விவகாரம் சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.

இதனை பலர் விமர்சித்தாலும், தான் அவரை ஒரு குழந்தைபோல் நினைத்து அன்பாக பாராட்டவே செய்ததாக ஊடகங்களிடையே பூர்ணா குறிப்பிட்டிருந்தார். தீ ஜோடி சாம்பியன்ஸ் என்கிற பிரபல தெலுங்கு ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்குதான் நடிகை பூர்ணா நடுவராக இருந்துவருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடந்த டான்ஸ் பெர்ஃபார்மென்ஸின் போதுதான், இதில் பங்கேற்ற  போட்டியாளரை, அவரது அபாரமான டான்ஸ்க்காக பாராட்டும் வகையில் அவரது கன்னத்தை கடித்து முத்தமிட்டு பூர்ணா பாராட்டிய அந்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.

முன்னதாக தமிழில் துரோகம், சவரக்கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த நடிகை பூர்ணா, அண்மையில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபிகேசன் தயாரித்து நெட்ஃபிளிக்ஸில் வெளியான நவரசா ஆந்தாலஜி தொகுப்பு படத்தில் இடம் பெற்றிருந்தார்.

இந்த தொகுப்பில் இடம் பெற்ற, கார்த்திக் நரேன் இயக்கிய ‘புராஜக்ட் அக்னி’ திரைப்படத்தில் அரவிந்த் சுவாமியுடன் இணைந்து பூர்ணா நடித்திருந்தார்.

தவிர, தற்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி நடித்து வெளியான  ‘தலைவி’ திரைப்படத்திலும் பூர்ணா நடித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் கங்கனாவின் தோழியாக பூர்ணா நடித்திருந்தார்.

இதேபோல் மேற்கூறிய இந்த பிரபல தெலுங்கு சேனலின் நடன நிகழ்ச்சி மட்டுமல்லாது இன்னொரு நகைச்சுவை கலந்த காமெடி ஷோவிலும் பங்கேற்கும் இன்னொரு இளம் நடிகை ராஷ்மி கவுதம். 

தமிழில் சாந்தனு, சந்தானம் நடித்த ‘கண்டேன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராஷ்மி கவுதம். தவிர, மாப்பிள்ளை விநாயகர், தவ்லத் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். மேலும் பல தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் சில வெப் தொடரிலும் நடித்த இவர் இந்த சேனலில் நடக்கும் ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் ஒரு அணிக்கு லீடராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் இதில் பங்கேற்கும் சுடிகலி சுதீர் என்பவருக்குமான  கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அதன் உச்சகட்டமாக இவர்கள் அடிக்கடி ரொமான்ஸ் பாடலுக்கு நடனம் ஆடுவது, ப்ரோபோஸ் செய்துகொள்வது ஜாலியாக இந்த ஷோவில் செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஒருமுறை இந்த ரியாலிட்டி ஷோக்களில் திருமண காட்சிகள் கூட அரங்கேறின. 

அந்த சமயத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்த ராஷ்மி நிகழ்ச்சிக்காகவே இவ்வாறு பெர்ஃபார்ம் பண்ணுவதாகவும், மற்றபடி நிஜவாழ்க்கையில் இருவரும் நெருக்கமான நண்பர்கள் கூட இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். எனினும் இந்நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் எப்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஒளிபரப்பாகி வருகின்றனர்.

Also Read: நாக்கை துருத்தி.. "தெறிக்க விடுறாங்களே!".. சமந்தா.. திரிஷா.. கீர்த்தி சுரேஷ் fans-அ கைலயே புடிக்க முடியல!.. Internet-ஐ கலக்கும் Viral போட்டோ!!! 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Poorna and Rashmi Gautam viral telugu reality shows trending

People looking for online information on Dhee, Dhee13, ETV, Jabardasth, Poorna, Rashmi Gautam, The Champion, Trending will find this news story useful.