www.garudabazaar.com

விஜய்யின் "Thalapathy66" படம்.. வந்தாச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் தம்முடைய 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Breaking Vamshi Paidipally Directs Vijay Thalapathy66 Official

பீஸ்ட் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் தளபதி விஜய் ஷாட் துப்பாக்கிகள் வைத்துக்கொண்டு மிரட்டலாக போஸ் கொடுத்திருப்பார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சி அளிக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் வம்சி பைடிபல்லி தளபதி விஜய்யின் 66-வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வம்சி பைடிபல்லி கார்த்தி மற்றும் நாகார்ஜூனா நடிப்பில் தோழா திரைப்படத்தை இயக்கியவர். இவர் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படத்தில் இணைவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில்தான் அவர்களுக்கு விருந்தாக இப்போது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி, தில் ராஜூ மற்றும் சிரிஷ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் 66வது படமான #Thalapathy66 படத்தை வம்சி பைடிபல்லி இயக்குவதாகவும், விரைவில் தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிரபலமான நடிகர்கள் கொண்ட படக்குழுவினரின் இதர விபரங்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SVC எனப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தளபதி விஜய்யுடன் இணையும் முதல் தமிழ்ப்படம் இது என்பதும்,  ‘தளபதி விஜய்யின் இந்த 66வது’ திரைப்படம் குறித்த அறிவிப்பு திரையுலகிலும், ரசிகர்களிடையேயும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: "SPB-யிடம் கடைசியா யார பார்க்கணும்னு கேட்டப்ப.. அவர் சொன்ன பெயர்" - இளையராஜா உருக்கமான பேச்சு.. Video!

Breaking Vamshi Paidipally Directs Vijay Thalapathy66 Official

People looking for online information on Sree Venkateswara Cinemas, SVC, Thalapathy65, Thalapathy66, ThalapathyVijay, Vamshi Paidipally, VjiayNext will find this news story useful.