www.garudabazaar.com

பசுமாட்டில், தானே பால் கறந்து டீ போட்டு குடிக்கும் பாபநாசம் பட நடிகை.. Viral ஆகும் Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நிவேதா தாமஸ், பசுவிடமிருந்து ஃபிரஷ்ஷாக பால் கறந்து, அந்த பாலில் டீ போட்டு குடிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Nivetha Thomas milked from the cow trending video நிவேதா தாமஸ்

தளபதி விஜய் நடித்த ‘குருவி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ், ‘ஜில்லா’ திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்தவர்.

அதன் பின்னர் கமல்ஹாசனுக்கு மகளாக ‘பாபநாசம்’ படத்திலும், ரஜினிகாந்தின் மகளாக ‘தர்பார்’ படத்திலும் நடித்த நிவேதா தாமஸ், தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே இன்ஸ்டாகிராமில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள நிவேதா தாமஸ், அவ்வப்போது பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் பசுவிடமிருந்து நடிகை நிவேதா தாமஸ், பால் கறந்து, அந்த பாலில் டீ போட்டு குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

மிக லாவகமாக அவர் பால் கறக்கும் இந்த வீடியோவுக்கு சுமார் இரண்டு லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இம்மாதம் திரைக்கு வரும் ராய் லக்‌ஷ்மி படம்! ரிலீஸ் தேதியுடன் தனுஷ் வெளியிட்ட டிரெய்லர்!

Nivetha Thomas milked from the cow trending video நிவேதா தாமஸ்

People looking for online information on Nivetha Thomas will find this news story useful.