"ஆஹா.. இவ்ளோ பண்ணியும் இத மறந்துட்டாங்களே?".. பேசுபொருளான 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' எபிசோடு!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரக்கூடியவை.

அவற்றுள் முக்கியமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசம் மற்றும் அண்ணன் தம்பி உறவு ஆகிவற்றை மையமாகக் கொண்ட ஒரு டிராமா தான் இந்த கதை. மிகவும் விறுவிறுப்பான திருப்பங்களுடனும், எமோஷனலாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதுடன் அவர்களின் உணர்விலும் வாழ்விலும் கலந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சீரியலில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் மறைந்துவிட்டார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் - பாண்டியனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து லட்சுமி கேரக்டர் இறந்து போனதை அடுத்து மற்ற அனைத்து கேரக்டர்களும் அழும்படியான காட்சிகள் இந்த சீரியலில் அரங்கேறின. இதில் அத்தனை நடிகர்களும் அழுவதை பார்த்து ரசிகர்களும் அழுது விட்டனர். அந்த அளவுக்கு எமோஷனலான காட்சிகள் அன்மையில் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த ஒரு சடங்கு விஷயத்தை பற்றி நெட்டிசன்கள் பரவலாகப் பேசி வருகின்றனர். அதன்படி இந்த சீரியலில் லட்சுமி அம்மாள் இறந்ததற்கு அவருடைய கடைசி மகன் கண்ணன் வருவாரா மாட்டாரா என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருப்பதாய் காட்டப்பட்டது. அவர் கடைசி நிமிடத்தில் எமோஷனலாக ஓடி வந்து அழுத காட்சிகள் தத்ரூபமாக வந்திருக்கின்றன.
அண்மையில் கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடந்த திருமணம், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சிலருக்கு அதிருப்தி இருந்ததால், கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இதற்கென கண்ணனை வீட்டைவிட்டு அனுப்பியதால் லட்சுமி அம்மாள் மனமுடைந்து இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அந்த லட்சுமி அம்மாள் கதாபாத்திரம் இறந்து போவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதில் கதைப்படி குமரன், ஜீவா, கண்ணன் அனைவரும் இருக்கும் பொழுது மூர்த்தி கொல்லி வைத்தது போல் காட்டி இருப்பார்கள். ஆனால் மூர்த்தியின் மனைவி தனம் (சுஜிதா) கர்ப்பிணியாக இருப்பதால், சம்பிரதாயப்படி மூர்த்தி கொல்லி வைக்க கூடாது என்பது பொதுவாக பின்தொடரப் படும் வழக்கமாக இருக்கும். ஆனால் இங்கு மூர்த்தி கொல்லி வைக்கிறார்.
இந்நிலையில்தான் இந்த காட்சியை பார்த்துவிட்டு சில ரசிகர்கள், “இவ்வளவும் செய்து.. மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்து விட்டீர்களே பாஸ்!” என்று செல்லமாக கமெண்ட் பண்ணி வருகின்றனர்.
இன்னும் பலர் எல்லாவற்றிலும் இப்படி லாஜிக் பார்க்க தேவையில்லை. சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடைமுறை சம்பிரதாயங்களை அப்படியே எதிர்பார்க்க முடியுமா? என்றும் கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர்.
இதிலிருந்து இந்த சீரியலை எந்த அளவுக்கு நெருக்கமாகவும், நுணுக்கமாக மக்கள் பார்த்து வருகிறார்கள் என்பது தெரிகிறது என்றும் இன்னொரு சாரர் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். இந்த சீரியலில் கண்ணனாக சரவணன் நடித்து வருகிறார். அவரது மனைவி ஐஸ்வர்யாவாக நடித்து வந்த விஜே தீபிகா மாற்றப்பட்டதை அடுத்து, அந்த கேரக்டரில் தற்போது சாய் காயத்ரி நடித்து வருகிறார்.