www.garudabazaar.com

'தலைவன்' வடிவேலுக்கு "பிறந்த நாள்".. காமெடி பிரபலம் தந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்..! நெகிழவைக்கும் Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி திரைப்பட உருவாக்கம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்துள்ள நிலையில், நடிகர் வடிவேலு நடிக்கும் அடுத்தடுத்து 2 படங்களை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கிறார்.

vadivelu Birthday surprise gift trending வடிவேலு

அந்த வகையில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர்' என தலைப்பு வைக்கப்படவிருப்பதாக கூறப்படும் திரைப்படத்தில் வடிவேலு நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளியானது.

இந்தப் படத்தின் பிரத்யேகமான பூஜை விநாயகர் சதுர்த்தியை (10.09.2021) முன்னிட்டு நடந்தது. தவிர, இந்த படக்குழுவினரோடு இன்று தமது 61-வது பிறந்தநாளை கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில் ‘கலக்கப்போவது யாரு’ பாலா நடிகர் வடிவேலு அவரது தாயாருடன் இருக்கும் ஓவியத்தை பரிசளித்து, வடிவேலு அவர்களின் தாயார் வடிவேலுவை ‘வாடா ராசா’ என அழைப்பதை நினைவூட்டுகிறார்.

வடிவேலு நெகிழ்ந்து தமது தாயாரின் ஓவியத்துக்கு முத்தமிடுகிறார்.

'தலைவன்' வடிவேலுக்கு "பிறந்த நாள்".. காமெடி பிரபலம் தந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்..! நெகிழவைக்கும் VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vadivelu Birthday surprise gift trending வடிவேலு

People looking for online information on Actor Vadivelu, Vadivelu will find this news story useful.