''அவதார் பட டைட்டிலை ஜேம்ஸ் கேமரூனுக்கே நான் தான் சொன்னேன்'' - பிரபல ஹீரோ அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 31, 2019 12:13 PM
பாலிவுட்டில் பிரபல ஹீரோவாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் கோவிந்தா. இவர் தமிழிலும் ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோர் நடித்த '3 ரோஸஸ்' படத்தில் ஒரு பாடலில் நடனமாடியிருந்தார்.

தற்போது இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், அவதார் டைட்டிலை அவர் தான் ஜேம்ஸ் கேமரூனுக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவதார் படத்தில் நடிக்க ஜேம்ஸ் கேமரூன் தன்னை அனுகியதாகவும், ஆனால் 412 நாட்கள் தொடர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால் அந்த வாய்ப்பை மறுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவதார் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகும் என்று ஜேம்ஸ் கேமரூனிடம் வாழ்த்துகள் தெரிவித்ததாகவும் கூறினார்.
Tags : Govinda, Avatar, James Cameron