'பிக்பாஸ் 3' கொண்டாட்டத்திற்கு தயாராகும் போட்டியாளர்கள் - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 17, 2019 06:06 PM
கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீசனில் காதல், சண்டைகள் என எப்பொழுதும் பரபரப்பாகவே இருந்தது.

போட்டியாளர்களும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துள்ள நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடும் கருத்துகள் வைரலாகி வருகிறது.
இரண்டு சீசன்கள் முடிவடைந்ததும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இந்த வருடம் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. போட்டியாளர்கள் தர்ஷன், ஷெரின், சாக்ஷி உள்ளிட்டோர் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.
Tags : Bigg Boss 3 Kondattam, Kavin, Sandy, Sherin, Tharshan