அவர் விபூதி பூசுனா பிடிக்கிது, சிலுவை போட்டா பிடிக்கலையா ? - பிரபல நடிகர் Tweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் 'பிகில்'. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.

Bjp Member S.Ve.Shekher Tweet About Thalapathy Vijay Bigil

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த  படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த  படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் அந்த படத்தில் விஜய் கதாப்பாத்திரம் ராயப்பன், மைக்கெல் என்ற கிறிஸ்தவபெயர்களில் வருவதை குறிப்பிட்ட சிலர் அது குறித்து பலவாறாக விமர்சித்தார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகரும், தமிழக பாஜக பிரபலமுமான எஸ்.வி.சேகர் “விஜய் விபூதி பூசி நடிச்சா பிடிக்கும். சிலுவை அணிந்தால் பிடிக்காதா? அவர் எங்காவது வெளியே தன் மதத்தை தூக்கி பிடித்து பேசி பார்த்திருக்கிறீர்களா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.