''அந்த சைக்கோக்களுக்கு இது செம அடி...'' - 'பிக்பாஸ் 3' வனிதா சாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் வனிதா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

Bigg Boss 3 Fame Vanitha tweets about Cyber Bullying

பிக்பாஸ் முடிவடைந்துள்ள நிலையில் வெளியே வந்து அவர் இடும் ட்வீட்டுக்கள் மிகவும் வைரலாகி வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் வீடியோ பாடகி ஒருவர் உருவ கேலி தொடர்பாக தானே இசையமைத்து பாடியுள்ளார். அதனை பகிர்ந்த வனிதா, ''வெறுப்பாளர்களுக்கும், கிண்டல் செய்பவர்களுக்கும் சைக்கோக்களுக்கும் இது சரியான அடி. உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் குறித்து ட்வீட் செய்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.