www.garudabazaar.com

பிரபல நடிகையுடன் ஷாருக்கான் நடிக்கும் புதிய படம்.. BTS வீடியோ வெளியிட்டு அப்டேட் கொடுத்த SRK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷாருக்கான் நடிக்கும் DUNKI படத்தின் படப்பிடிப்பு தள வீடியோ  வெளியாகி உள்ளது.

Shah Rukh Khan Dunki Movie Shooting Update

Also Read | மிரட்டும் லுக்கில் ஷாருக்கான் - தீபிகா படுகோனே.. பதான் பட ரிலீஸ் தேதியை உறுதி செய்த போஸ்டர்!

சில மாதங்களுக்கு முன் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்க ஷாருக்கான் கமிட் ஆனார். ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து DUNKI என்ற இந்த படத்தை தயாரிக்கின்றன.

முன்னாபாய் MBBS,  3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட பல சூப்பர் மெஹா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இந்திய சினிமாவின் டாப் MOST WANTED இயக்குனர் ஆவார்.

Shah Rukh Khan Dunki Movie Shooting Update

Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கவுள்ளார்.  நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், வந்தான் வென்றான், கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தவர். ஹிந்தியில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தின் ஆரம்பக்கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் துவங்கியது. வாட்டர்லூ பிரிட்ஜில் ஆற்றங்கரையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது.

Shah Rukh Khan Dunki Movie Shooting Update

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் நடைபெற்றது. சவுதி அரேபியா படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் ஷாருக்கான் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சவுதி அரேபியா அரசுக்கும், கலாச்சார அமைச்சகத்துக்கும், சவுதி மக்களுக்கும் நன்றி கூறியுள்ளார். மேலும் Dunki படத்தின் சவுதி அரேபியா படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் கூறியுள்ளார்.

Shah Rukh Khan Dunki Movie Shooting Update

ஷாருக்கானுக்கு அடுத்த 2023 ஆம் ஆண்டு 3 படங்கள் வரவுள்ளன. தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாமுடன் சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில் 'பதான்' படத்தில்  நடித்துள்ளார், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அட்லியின் இயக்கத்தில் ஜவான் படமும் ஜூன் 2 ஆம் தேதி வெளிவரவுள்ளது.

Also Read | FIFA: கால்பந்து உலகக் கோப்பை.. கத்தார் சென்ற நெல்சன்.. நம்மள விட பெரிய மெஸ்ஸி FAN போலயே!

தொடர்புடைய இணைப்புகள்

Shah Rukh Khan Dunki Movie Shooting Update

People looking for online information on Dunki Movie, Dunki Movie Shooting Update, Shah Rukh Khan will find this news story useful.