'கைதி' ரீமேக் தடை விவகாரம்!.. "எங்களால் நிரூபிக்க முடியும்".. தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் 'கைதி'. ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டது.

'kaithi' remake ban issue! Production company description!

தமிழில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளத்தில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை ரீமேக் செய்ய கேரள உயர் நீதி மன்றம் தடை விதித்துள்ளதாக செய்திகள் பரவியது.

'kaithi' remake ban issue! Production company description!

இது தொடர்பாக டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தரப்பு நிறுவனம் விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். இது சம்மந்தமாக ஊடக நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு கருத்து கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதே சமயம் கைதி சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ளது குற்றச்சாட்டுகளை உறுதியாக மறுக்கவோ, நிரூபிக்கவோ முடியும்" என்று தெரிவித்துள்ளது.

'kaithi' remake ban issue! Production company description!

People looking for online information on Kaithi movie, Lokesh Kanagaraj will find this news story useful.