“நிறைய projects பண்றோம்… சீக்கிரமே சொல்றோம்”… தோனி பட நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Dhoni entertainment denied fraud claims by company name

Also Read | இன்ஸ்டண்ட் Chartbuster ஹிட் ‘பத்தல பத்தல’… 24 மணிநேரத்துக்குள் இத்தனை மில்லியன்ஸ் வியூஸா?

வெற்றிக்கேப்டன்…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி  2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை ஆகியவற்றை தனது தலைமையில் வென்று கொடுத்தவர். சில ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

படமாகிய தோனியின் வாழ்க்கை….

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியில் தோனியின் வாழ்க்கை வரலாறு ’எம் எஸ் தோனி ‘ என்ற பெயரிலேயே திரைப்படமாக உருவானது. தோனியின் ஆரம்பகாலம் முதல் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிவரை அந்த படத்தில் இடம்பெற்றிருந்தது. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தோனியாக அந்த படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பல இந்திய மொழிகளிலும் டப்பிங் ஆகி பெரியளவில் வெற்றி பெற்றது.

Dhoni entertainment denied fraud claims by company name

சினிமாவில் கால்பதிக்கும் தோனி…

இந்நிலையில் தோனி, விரைவில் சினிமா தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் பரவி வைரலாகின. அதுவும் தமிழ் சினிமாவில், அவர் முதல் படமாக நயன்தாரா நடிக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்த படம் விரைவில் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் படம்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Dhoni entertainment denied fraud claims by company name

விரைவில் அறிவிப்பு…

அந்த அறிவிப்பில் “தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது சஞ்சய் என்று யாருடனும் இணைந்து பணியாற்றவில்லை. நாங்கள் அப்படி யாரையும் பணிக்கு அமர்த்தவில்லை. யாரும் இதுபோன்ற போலியான அறிவிப்புகளால் ஏமாந்துவிடவேண்டாம். எங்கள் குழு தற்போது பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளைத் தூண்டும் படங்களுக்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அவை பற்றி விரைவில் நாங்கள் உங்களிடம் அறிவிக்கிறோம். அடுத்தடுத்த விவரங்களுக்காக எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடருங்கள்” எனக் கூறியுள்ளனர்.

Dhoni entertainment denied fraud claims by company name

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“நிறைய PROJECTS பண்றோம்… சீக்கிரமே சொல்றோம்”… தோனி பட நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhoni entertainment denied fraud claims by company name

People looking for online information on தோனி, தோனி எண்டர்டெயின்மெண்ட், Dhoni Entertainment, MS dhoni will find this news story useful.