'என் பையன பார்க்கணும், wait பண்ணிட்டு இருக்கேன்'' - ஃபோட்டோ பகிர்ந்து பிரபல ஹீரோ உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரித்து நடிக்கவிருக்கும் 'மோகன்தாஸ்' படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்கவுள்ளார்.

இந்த படத்துக்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்ய, சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து ஆர்யனை காண காத்திருக்கிறேன். லாக்டவுனின் போது எனது மகன் ஆர்யன். வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
Waiting to meet my son #Aryan once things get better...🙏Lets pray for humanity..
This is him during lockdown...stayin at home #StayHomeStaySafe pic.twitter.com/VL3wthy96q
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) April 16, 2020