கொரோனா : கஷ்டப்படும் தொழிலாளர்கள்... 'எனது ஓட்டலில் பிரியாணி இலவசம்'... பிரபல நடிகர் அறிவிப்பு..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இப்பிழையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி வரும் மே மாதம் 3 -ம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

இதனால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தினக்கூலிகள் தான். அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் காசு என்று இருப்பவர்களுக்கு இந்த செய்தி இடியாய் விழுந்து இருக்கிறது. இந்நிலையில் சினிமாவில் இருக்கும் தொழிலார்கள், மற்றும் தினக்கூலிகளுக்கு தனது பிரியாணி கடையை திறந்து இருக்கிறார் நடிகர் விக்னேஷ். கிழக்கு சீமையிலே, அப்பு போன்ற பல படங்களில் நடித்திருக்கும் இவர் சென்னை ஈக்காட்டுதாங்களில் சேலம் RR பிரியாணி கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது சினிமா துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். பசித்தவர்களுக்கு உணவு அளிப்பது போல் வேறு சிறந்த உதவி இருக்கிறதா
கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்கள் - ஈக்காடுதாங்கலில் உள்ள #சேலம்RR ஹோட்டலில் மாலை 7முதல் 9மணிவரை இலவசமாக உணவு அருந்துமாறு அழைக்கிறார் நடிகர் #விக்னேஷ். நல்ல உள்ளம். #vignesh #actorvignesh pic.twitter.com/wRzTJFdYNI
— Johnson PRO (@johnsoncinepro) April 15, 2020