சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வில் நடிக்கும் விஷால்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் மற்றும் மிஷ்கின் கூட்டணி அமைத்துள்ளனர்.

Vishal and director Mysskin will team up again for Thupparivalan 2

லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துருக்கியில் உள்ள கப்படோசியாவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக துருக்கியில் நடக்கும் சுந்தர்.சி படத்தின் ஷூட்டிங்கிற்கு சென்ற இயக்குநர் மிஷ்கின் விஷாலை சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, மீண்டும் மிஷ்கின் மற்றும் விஷால் கூட்டணியில் ‘துப்பறிவாளன் 2’ திரைப்படம் உருவாகவிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இது தெலுங்கில் வெளியான ‘டெம்பர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.