அடுத்தப் படத்திற்காக அயல்நாடு பறந்த விஷால்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Vishal resume shoot for Sundar C film at Azerbaijan

இதனிடையே,சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.

இப்படத்தின்  ஷூட்டிங் பணிகள் துருக்கியில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாளுக்கு முன்பாக பைக் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது, எதிர்பாராத விதமாக நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்ற விஷால் தற்போது உடல்நலம் தேறியதையடுத்து மீண்டும் ஷூட்டிங் பணியை துவக்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக அஸர்பைஜான் சென்றுள்ள படக்குழுவினர் நாளை (ஏப்.1) படத்தின் ஷூட்டிங் பணியை தொடங்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.

இது தவிர, விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படம் வரும் ஏப்.19ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படம் தெலுங்கில் வெளியாகி சூப்பஹிட்டான ‘டெம்பர்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.