‘சண்டக்கோழி 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதனிடையே,சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் துருக்கியில் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துருக்கியில் உள்ள கேப்படோசியா மலைப்பகுதியில் இப்படத்தில் இடம்பெறும் அதிரடி ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது வில்லனை துரத்தியப்டி ATV பைக்கில் விஷால் வேகமாக செல்லும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்பாராத விதமாக விஷால் வேகமாக சென்ற பைக் திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்ததில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
டூப் போடாமல் சண்டைக் காட்சியில் நடித்ததால் விஷாலின் கால் மற்றும் கையில் எழும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது.