நடிகர் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே 10. தேதி ரிலீசாகிறது.

இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘அயோக்யா’ திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வால், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.
‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் ஏப்.19ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ‘அயோக்யா’ திரைப்படம் வரும் மே.10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை 7 மணிக்கு வெளியாகிறது.