Breaking : பிரபல இயக்குநருடன் இணையும் விஷ்ணு விஷால் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெயில்', 'அங்காடித் தெரு' உள்ளிட்ட யதார்த்தமான படங்களின் மூலம் மக்களின் மனம் கவர்ந்த இயக்குநர்களில் ஒருவர் வசந்தபாலன். இவர் கடைசியாக இயக்கிய 'காவியத் தலைவன்' விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Vishnu Vishal Joins with Vasanthabalan produce by Lyca production

இவர் தற்போது ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து 'ஜெயில்' என்கிற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இவரது அடுத்த படம் குறித்து தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.

இயக்குநர் வசந்தபாலன் அடுத்ததாக, விஷ்ணு விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பதாகவும் அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

விஷ்ணு விஷால் கடைசியாக தயாரித்து நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என்ற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க, செல்ல அய்யாவு இந்த படத்தை இயக்கியிருந்தார்.