பாகுபலி ராணா - சாய் பல்லவி நடிக்கும் புதிய படம்.. ரிலீஸ் தேதியில் மாற்றம்! வெளியான OFFICIAL அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராணா, சாய் பல்லவி, வேணு உடுகுலா நடித்துள்ள விராத பர்வம் படம் உலகம் முழுவதும் திட்டமிட்ட நாளுக்கு முன்கூட்டியே திரையரங்குகளில் வெளியாகிறது.

Virata Parvam Theatrical Release Preponed To June 17th

ராணா டக்குபதி மற்றும் சாய் பல்லவி நடித்த விராத பர்வம் ஒரு தனித்துவமான கதையைக் கொண்ட திரைப்படமாகும், இந்த ஜோடி இதுவரை ரசிகர்கள் பார்த்திராத கதாபாத்திரங்களில் தோன்ற உள்ளனர்.

Virata Parvam Theatrical Release Preponed To June 17th

விராத பர்வம் படம் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 17ஆம் தேதிக்கு முன்கூட்டி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடிக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

Virata Parvam Theatrical Release Preponed To June 17th

இப்படத்தில் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார். சுரேஷ் பொப்பிலி இசையமைக்க, டானி சான்செஸ் லோபஸ் மற்றும் திவாகர் மணி ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

Virata Parvam Theatrical Release Preponed To June 17th

விராத பர்வம் படத்தில் பிரியாமணி, நந்திதா தாஸ், நவீன் சந்திரா, ஜரீனா வஹாப், ஈஸ்வரி ராவ் மற்றும் சாய் சந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Virata Parvam Theatrical Release Preponed To June 17th

People looking for online information on Rana, Sai Pallavi, Virata Parvam will find this news story useful.