BREAKING: கமல் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாய்பல்லவி தனது 30வது பிறந்தநாளை இன்று (09.05.2022) கொண்டாடுகிறார்.

Sai Pallavi is pairing up with Siva Karthikeyan for SK 21

Also Read | விஜய் தேவரகொண்டா பிறந்தநாள் பார்ட்டியில் சமந்தா.. VJD-க்கு கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன் புதிய படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார், இந்த படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தை ராஜ் கமலுடன் இணைந்து சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Sai Pallavi is pairing up with Siva Karthikeyan for SK 21

சில மாதங்களுக்கு முன் இது குறித்து கமல் ஹாசன் டிவிட்டரில் "சில வேலைகள்  சந்தோசத்தை தரும் ; சில கௌரவத்தையும், பெருமையையும் தரும். சோனி & RKFI இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

Sai Pallavi is pairing up with Siva Karthikeyan for SK 21

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பு சாய் பல்லவி பிறந்தநாளான இன்று மாலை RKFI மூலம் அறிவிக்கப்பட உள்ளது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

Sai Pallavi is pairing up with Siva Karthikeyan for SK 21

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன், பிக்பாஸ் ராஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார்.

Sai Pallavi is pairing up with Siva Karthikeyan for SK 21

Sai Pallavi is pairing up with Siva Karthikeyan for SK 21

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BREAKING: கமல் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi is pairing up with Siva Karthikeyan for SK 21

People looking for online information on Don Movie, Kamal Haasan, Sai Pallavi, Sivakarthikeyan, SK 21, Vikram Movie will find this news story useful.