சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK20 படம் எப்போ ரிலீஸ்? வர்ற பண்டிகை களைகட்ட போகுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 20 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Sivakarthikeyan SK 20 Movie Release Date Announed

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் உலகெங்கும் வெற்றிகரமாக  (13.05.2022) அன்று ரிலீசாகி 100 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது. டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் SK20 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan SK 20 Movie Release Date Announed

இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நவீன் பொலிசெட்டியும் நடிக்க உள்ளார். சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்க இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவர் போலந்து-உக்ரேனிய திரைப்படமான 'ஈடர்' இல் பணிபுரிந்துள்ளார் மேலும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஸ்பை சாகா ஸ்பெஷல் ஓபிஎஸ் 1.5 இல் 'நடாஷா' என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.

Sivakarthikeyan SK 20 Movie Release Date Announed

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 10.02.2022  அன்று துவங்கியது. படக்குழு காரைக்குடி அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினர். காரைக்குடிக்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் SK20 படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் நாள் ரிலீஸ் ஆகும் என சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.இந்திய - பிரிட்டிஷ் கொடியுடன் புறா & இதய எமோஜியையும் சேர்த்து சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார். விநாயகர் சதூர்த்திக்கு தொடர் விடுமுறை நாட்கள் உள்ளன. இதே நாளில் கார்த்தி நடித்த விருமன் படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Sivakarthikeyan SK 20 Movie Release Date Announed

SK 20 படத்தின் தலைப்பு, முதல் லுக் போஸ்டர் இன்னும் அறிவிக்கப்படுவதற்குள்ளே படத்தின் ஒட்டுமொத்த தமிழக உரிமையை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வலிமை படத்தை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan SK 20 Movie Release Date Announed

People looking for online information on Anudeep, August 31, Don, Siva Karthikeyan, SK, SK20 will find this news story useful.