உறவினர் கல்யாணத்தில் நடிகை சாய்பல்லவி ஆடிய சூப்பர் குத்து டான்ஸ்.. இப்போ இதான் ட்ரெண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீலகிரி: நடிகை சாய்பல்லவி உறவினர் திருமணத்தில் ஆடிய நடன வீடியோ செம வைரலாகி வருகிறது.

Sai Pallavi dance video at her cousin wedding goes viral

Also Read | 'விக்ரம்' படத்தோட சண்டைக்காட்சி எல்லாம் இப்படி தான் எடுத்தாங்க! வெளிவந்த அசத்தலான புதிய MAKING VIDEO

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார். ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

Sai Pallavi dance video at her cousin wedding goes viral

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தற்போது ராணாவுடன் நடித்த விராத பர்வம் படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். விராத பர்வம் ஜூலை 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இப்படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. 1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து நடிகர் ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் நக்சலைட் பாத்திரத்தில் நடிக்கிறார். சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடிக்கிறார்.

Sai Pallavi dance video at her cousin wedding goes viral

இந்நிலையில் சென்றாண்டு சமீபத்தில் நடந்த தனது உறவினரின் திருமணத்தில் நடிகை சாய்பல்லவி கலந்து கொண்டார். சாய் பல்லவி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருமணத்தில் அவர் நடனமாடிய சில வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இதனை பிரபல திருமண வீடியோ கவரேஜ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Sai Pallavi dance video at her cousin wedding goes viral

சாய்பல்லவி அடுத்ததாக கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

உறவினர் கல்யாணத்தில் நடிகை சாய்பல்லவி ஆடிய சூப்பர் குத்து டான்ஸ்.. இப்போ இதான் ட்ரெண்ட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi dance video at her cousin wedding goes viral

People looking for online information on சாய்பல்லவி, Sai Pallavi, Sai Pallavi dance video will find this news story useful.