"இதுனால தான் கல்யாணம் நடக்கலயா?".. அப்படி என்ன நடந்துச்சு? கங்கனாவே சொன்ன தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கங்கனா ரனாவத் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார்.

Actress Kangana Ranaut Talks about Her Marriage

Also Read | கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் காட்டிய அன்பு..! எவ்ளோ பெரிய கட் அவுட் பாருங்க.. தெறிக்கவிடும் PHOTOS!

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர். சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார்.

அவ்வப்போது தனது மனதில் பட்ட கருத்துக்களை தெரிவித்து கங்கனா ரனாவத் சர்ச்சையை கிளப்புவார். சமீபத்தில் கெஹ்ரையன், காஷ்மீர் பைல்ஸ், கங்குபாய் படங்களுக்கும், ஆஸ்கார் - கிராமி விருதுகள் குறித்து தெரிவித்த கருத்துக்கள் விவாதத்தை கிளப்பின. 

Actress Kangana Ranaut Talks about Her Marriage

தற்போது கங்கனா ரனாவத் தனது ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படத்தில் ஏஜென்ட் அக்னி என்ற உளவாளியாக கங்கனா நடித்துள்ளார். ஆக்‌ஷன் நிரம்பிய இப்பாத்திரத்திற்காக உடலமைப்பை மாற்றியுள்ளார். ரஸ்னீஷ் காய் இயக்கிய இப்படம், மே 20 அன்று திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது. இந்தி சினிமாவின் முதல் பெண் ஸ்பை த்ரில்லர் படம் இதுவாகும்.

Actress Kangana Ranaut Talks about Her Marriage

இந்நிலையில், இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கங்கனாவிடம், "கங்கனா நிஜ வாழ்க்கையில் ‘தகத்’ (டாம்பாய்) போல் இருக்கிறாரா?" என கேட்கப்பட்டது

இதற்கு பதிலளித்த கங்கனா ரனாவத், சிரித்துக்கொண்டே.. "அப்படி இல்லை, நிஜ வாழ்க்கையில் நான் யாரை அடிப்பேன்? உங்களைப் போன்றவர்கள் இப்படி வதந்திகளை பரப்புவதால், என்னால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆமாம், நான் பையன்களை அடித்தேன் என்று என்னைப் பற்றி பல வதந்திகள் பரப்பப்படுவதால் மாப்பிள்ளை கிடைக்கவில்லை” என பதிலளித்தார்.

Actress Kangana Ranaut Talks about Her Marriage

இப்படத்துக்கு பின்  "சீதா - தி அவதாரம்" என்ற தனது அடுத்த பெரிய படத்தை கங்கனா அறிவித்துள்ளார். இந்த படம் எபிக் டிராமா வகைமையில் உருவாகிறது. கங்கனா ரனாவத் சீதையாக நடிக்கிறார். அலாவிக் தேசாய் இயக்கும் இந்த படத்தை எஸ்எஸ் ஸ்டுடியோவின் சலோனி சர்மா தயாரிக்கவுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"இதுனால தான் கல்யாணம் நடக்கலயா?".. அப்படி என்ன நடந்துச்சு? கங்கனாவே சொன்ன தகவல். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kangana Ranaut Talks about Her Marriage

People looking for online information on நடிகை கங்கனா ரனாவத், Kangana Ranaut will find this news story useful.