"அவர் சொன்னதுல அப்படி என்ன தப்பு இருக்கு?" மகேஷ்பாபுவுக்கு குரல் கொடுத்த கங்கனா ரனாவத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஆதரவாக நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

Actress Kangana Ranaut on Superstar Mahesh Babu Remark on Bollywood

Also Read | ராஜமௌலியின் RRR.. 50வது நாளிலும் படைத்த மெகா சாதனை! இது நம்ம லிஸ்ட்லயே இல்லை

SVP படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய மகேஷ் பாபு இந்தி படங்களில் நடிப்பது பற்றி சொன்ன கருத்து வைரலாகி சர்ச்சையை உருவாக்கியது.

மகேஷ்பாபு பேசியது, “நான் திமிர்பிடித்தவனாகத் தோன்றலாம், எனக்கு இந்தியில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்களால் என்னை வாங்க முடியாது என்று நினைக்கிறேன். நான் என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தெலுங்கு திரையுலகில் எனக்கு இருக்கும் நட்சத்திர அந்தஸ்தும் அன்பும் போதுமானது, வேறு மொழிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததில்லை" என கூறினார். இது பயங்கர சர்ச்சை ஆனது.

Actress Kangana Ranaut on Superstar Mahesh Babu Remark on Bollywood

அதன் பின்னர் ஒரிரு நாளில் தனது கருத்துக்கு விளக்கம் அளிக்கும் விதமாக “சினிமாவை நேசிப்பதாகவும், அனைத்து மொழிகளையும் மதிப்பதாகவும்” மகேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் “தான் பணிபுரிந்து வரும் தெலுங்கு சினிமாவிலேயே தொடர்ந்து பணியாற்ற வசதியாக இருப்பதாகவும், தெலுங்கு சினிமா முன்னேறுவது தொடர்பான தனது கனவு நிறைவேறியது மகிழ்ச்சி” என்றும் கூறினார்.

இது குறித்து நடிகை கங்கனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கங்கனா கூறுகையில், "பாலிவுட் அவரை வாங்க முடியாது என்று அவர் (மகேஷ் பாபு) கூறியது சரிதான், இதை நான் ஒப்புக்கொள்கிறேன். பல திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரை அணுகியுள்ளனர் என்பது எனக்குத் தெரியும்."“அவரது தலைமுறை தெலுங்குத் துறையை இந்தியாவின் நம்பர் ஒன் திரைப்படத் துறையாக மாற்றியுள்ளது. இப்போது, ​​பாலிவுட் நிச்சயமாக அவரை வாங்க முடியாது. இதை ஏன் பெரிய சர்ச்சையாக்க வேண்டும் என்று தெரியவில்லை’’ என்றார் கங்கனா ரனாவத்.

Actress Kangana Ranaut on Superstar Mahesh Babu Remark on Bollywood

மேலும், கங்கனா பேசும் பொழுது, “அவர் (மகேஷ் பாபு) தனது இண்டஸ்ட்ரி மீது அதிக மரியாதையை மட்டுமே காட்டியுள்ளார், கடந்த 10-15 வருடங்களில் தெலுங்கு படங்கள் வளர்ந்திருப்பதை எங்களால் (பாலிவுட்) மறுக்க முடியாது... அவர்கள் தட்டில் எதையும் பெறவில்லை. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. இந்த நாட்டில் பல மொழிகள் உள்ளன, அவை அனைத்தும் முக்கியமானவை. எந்த மொழியும் மற்றதை விட பெரியது அல்லது சிறியது அல்ல" என்று கங்கனா கூறினார்.

Actress Kangana Ranaut on Superstar Mahesh Babu Remark on Bollywood

தற்போது கங்கனா ரனாவத் தனது ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இப்படத்தில் ஏஜென்ட் அக்னி என்ற உளவாளியாக கங்கனா நடித்துள்ளார். ஆக்‌ஷன் நிரம்பிய இப்பாத்திரத்திற்காக உடலமைப்பை மாற்றியுள்ளார். ரஸ்னீஷ் காய் இயக்கிய இப்படம், மே 20 அன்று திரையரங்கில் வெளியிடப்பட உள்ளது. இந்தி சினிமாவின் முதல் பெண் ஸ்பை த்ரில்லர் படம் இதுவாகும்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Actress Kangana Ranaut on Superstar Mahesh Babu Remark on Bollywood

People looking for online information on Bollywood, Kangana Ranaut, Mahesh Babu, Superstar Mahesh Babu will find this news story useful.