பாகுபலி நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தமா..? அவரே வெளியிட்ட போட்டோ... உண்மை இதுதான்...!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாகுபலி நடிகர் ராணா. இவர் சமீபத்தில் ஆர்க்கிடெக்ட் மிஹீக்கா பஜாஜ் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக செய்திகள் பரவியது.

ஆனால் எவ்வித உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், இன்று நடிகர் ராணா "Its Official" என்று தலைப்பிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வெளியான சில நிமிடங்களிலேயே அந்த புகைப்படம் மிகவும் வைரலானது. ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை பார்த்த பலரும் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நினைத்தனர். அப்படியே நடிகர் நானி அவரிடம் நிச்சயம் முடிந்து விட்டதா என்று கேட்க, நடிகர் ராணா "இது திருமணத்திற்கு முன்பாக இரு குடும்பமும் சேர்ந்து பரிசு பொருட்களையும், அன்பையும் பரிமாறி கொள்ளும் ரோகா நிகழ்ச்சி என்றும், நிச்சயதார்த்தம் இல்லையென்றும்" அவர் தெரிவித்துள்ளனர்.