கொரோனா வைரஸ் அச்சம்... தள்ளி போகிறது ரிலீஸ் தேதி.! - படக்குழுவிடம் இருந்து புதிய தகவல்.
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் ஆக வேண்டிய புதிய படம் தள்ளி போவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மைனா, கும்கி, தொடரி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். இவர் தற்போது காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ரானா டகுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் விஷ்னு விஷால், சோயா ஹுசைன், புல்கித் சாம்ராட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது.
இந்நிலையில் காடன் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழு சார்பில் வெளியான அறிவிப்பில் கூறியதாவது, 'ஈராஸ் நிறுவனம் எப்போதும் ரசிகர்களின் முக்கியதுவத்தை உணர்ந்து வைத்துள்ளது. மகிழ்ச்சியான ரசிகர்களே எங்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக காடன் (ஹாத்தி மேரே சாத்தி, ஆரண்யா) படத்தின் ரிலீஸை தள்ளி வைக்கிறோம். விரைவில் வேறு ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Because health and safety comes above everything!🙏🏻
Hope to see you guys soon at the theatres. Till then, stay safe! #HaathiMereSaathi #Aranya #Kaadan #ErosNow @RanaDaggubati #PrabuSolomon @TheVishnuVishal @PulkitSamrat @ShriyaP @zyhssn @ErosIntlPlc #SaveTheElephant🐘#Haathi pic.twitter.com/SsgLE1Blga
— Eros Now (@ErosNow) March 16, 2020