பாகுபலி ராணா இப்ப காட்டு யானைக்கு தோஸ்த்! –வெளியான பிரபு சாலமன் பட ஃபர்ஸ்ட் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாகுபலி திரைப்படத்தில் பல்வாள் தேவன் பாத்திரத்தில் நடித்த ராணா டகுபதிக்கு மின்னல் வேகத்தில் இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தார். ஆறு அடி உயரம் கொண்ட அவர் தன் கட்டுமஸ்தான உடலை பராமரிக்கும் விதம் அவருக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியது.

Rana Daggubati Prabhu Solomon Kaadan HaathiMereSaathi Aaranya First look poster

பாகுபலியைத் தொடர்ந்து பல மொழிப்படங்களில் நடிக்கத்தொடங்கிய அவர் தமிழில் ’பெங்களூர் நாட்கள்’, ஹிந்தியில் ’ஹவுஸ் ஃபுல் 4’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபு சாலமனுடன் இணைந்துள்ள முதல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மும்மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழில் ’காடன்’, தெலுங்கில் ‘அரண்யா’, ஹிந்தியில் ’ஹாத்தி மேரி சாத்தி’ என்று இப்படத்திற்கு பெயர் சூட்டியுள்ளனர். விஷ்ணு விஷால், சோயா ஹுசைன், ஷ்ரேயா பில்கோன்கர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

கட்டடங்கள் பெருகிவரும் நம் காலக்கட்டத்தில், காடுகள் குடியிருப்பிற்காக அழிக்கப்படுவது வெகு சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. கண நேரத்தில் அழிக்கப்படும் காடுகள் மீண்டும் உருவாக நூற்றாண்டு பிடிக்கின்றன. காடன் திரைப்படம் யானைகளின் வாழ்வியல் சார்ந்த திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor