www.garudabazaar.com

“ஏங்க பிரச்சனை பண்றீங்க?”.. விக்ரமன் & ஷிவினிடையே தொடங்கிய வாக்குவாதம் bigg boss 6 tamil

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு எலிமினேஷன்கள் இருந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறுவதாகவும், ஞாயிறு எபிசோடில் ஆயிஷா வெளியேறுவதாகவும் கமல் அறிவித்தார். 

vikraman shivin arguement bigg boss 6 tamil பிக்பாஸ்

Also Read | "நான் புரட்சி தளபதியும் அல்ல.. தளபதியும் அல்ல..!" – லத்தி பட விழாவில் விஷால் பேச்சு..

இதனை தொடர்ந்து அடுத்த வார நாமினேஷன் ப்ராசஸில், மைனா, அமுதவாணன், விக்ரமன் ஆகியோர் மணிகண்டனை நாமினேட் செய்துள்ளனர். இதேபோல் ரச்சிதா, மணிகண்டன் தனலட்சுமி ஆகியோர் விக்ரமனையும், ஏடிகே மற்றும் அசீம் ரச்சிதாவை நாமினேட் செய்துள்ளனர். ஷிவின், கதிரவன், ஏடிகே மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசீமை நாமினேட் செய்துள்ளனர். இதனிடையே இந்த வார கேப்டன்சி டாஸ்கில் மைனா ஜெயித்துள்ளார். 

vikraman shivin arguement bigg boss 6 tamil பிக்பாஸ்

இந்நிலையில் விக்ரமன் மற்றும் ஷிவின் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்ரமனும் சரி, ஷிவினும் சரி இருவருமே தாங்கள் சொல்லக்கூடிய கருத்தை மிகவும் வலுவாகவும் விபரமாகவும் சொல்லக்கூடியவர்கள். சில சமயம் இவர்களின் விளக்கமான கருத்துக்களே இவர்களுக்குள் வாக்குவாதத்தை அதிகப்படுத்தும். அந்த வகையில் விக்ரமன் சொன்ன ஒரு கருத்து குறித்து ஷிவின் விளக்கம் கேட்க, விக்ரமன் கொதித்திருக்கிறார்.

vikraman shivin arguement bigg boss 6 tamil பிக்பாஸ்

அதன்படி, கடந்த காலங்களில் ஷிவின் தேவையில்லாத வாக்குவாதத்தை ஏற்படுத்தியிருப்பதாக விக்ரமன் சொன்ன கருத்துக்கு நியாயம் கேட்ட ஷிவின், “அப்படி நான் என்ன பேசினேன்? என்ன நடந்தது என்று விளக்கிச் சொல்லுங்கள்.

vikraman shivin arguement bigg boss 6 tamil பிக்பாஸ்

உங்களுக்கு எதுவும் விளக்கம் சொல்வதற்கில்லை என்றால் எப்படி என்னுடைய பெயரை நீங்கள் எப்படி குறிப்பிட முடியும்? உங்களால் விளக்கமும் சொல்ல முடியவில்லையே?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

vikraman shivin arguement bigg boss 6 tamil பிக்பாஸ்

அதற்கு விக்ரமனம், ஷிவினிடம்,  “ஏங்க இவ்வளவு டீடெயிலாக ஒரு விஷயத்திற்குள் போகிறீர்கள்? நீங்கள் என்ன முயற்சி செய்கிறீர்கள் என்பது தெரிகிறது .. அது நடக்காது” என்று ஆவேசமாக பேசினார்.

Also Read | “ஒரு வாரமா ஆம்பளைங்க சமைச்சோமே..” .. கிச்சன் டீம் களேபரம்.. ஏடிகேவின் செம thug life.. bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

vikraman shivin arguement bigg boss 6 tamil பிக்பாஸ்

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil will find this news story useful.