www.garudabazaar.com

“ஒரு வாரமா ஆம்பளைங்க சமைச்சோமே..” .. கிச்சன் டீம் களேபரம்.. ஏடிகேவின் செம thug life.. bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

ADK thuglife comment on kitchen clash bigg boss 6 tamil

Also Read | "நான் புரட்சி தளபதியும் அல்ல.. தளபதியும் அல்ல..!" – லத்தி பட விழாவில் விஷால் பேச்சு..

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இதற்கு அடுத்த கட்டமாக அசல், அடுத்த வாரத்தில் ஷெரினா, பின்னர் மகேஸ்வரி, அடுத்து நிவாஷினி, அடுத்து ராபர்ட், அடுத்து குயின்ஸி என போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர்.

இதேபோல், பொம்மை டாஸ்க், ஃபேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் Vs பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம், சினிமா பிரபலங்கள் பலரின் கதாபாத்திரமாக போட்டியாளர்கள் மாறி நடிக்க வேண்டும் என்பது தான் இந்த வார டாஸ்க்காக இருந்தது. அப்படி இருக்கையில், போட்டியாளர்களுக்கு காசும் பிக்பாஸ் கொடுத்திருந்தார். எந்த போட்டியாளர் நன்றாக நடனம் ஆடி நடிக்கிறார்களோ அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் அது. முந்தைய வாரங்களை போல அதிகம் சண்டை சச்சரவுகள் இல்லாமல், சற்று கலகலப்பாக இந்த வாம் போனது.

ADK thuglife comment on kitchen clash bigg boss 6 tamil

இதில் மைக்கேல் ஜாக்சன், சிவாஜியின் நேசமணி, வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம், எம். ஆர். ராதா, சரோஜாதேவி, விக்ரமின் அந்நியன் கெட் அப், வடிவேலுவின் நாய் சேகர் என பல ஐகானிக் கதாபாத்திரங்களை சற்றே பெயர் மாற்றி பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வலம் வந்திருந்தனர். மேலும், தாங்கள் ஏற்ற கதாபாத்திரம் போல, அவர்கள் நடை, உடை, பாவனை உள்ளிட்ட விஷயங்களை சிலர் செய்திருந்ததும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, வார இறுதியில் வந்த கமல்ஹாசன், போட்டியாளர்களின் கடந்த வார செயல்பாடு குறித்து பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு மத்தியில், இந்த வாரம் இரண்டு எலிமினேஷன்களும் இருந்த நிலையில், சனிக்கிழமை எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராம் வெளியேறி இருந்தார். இதற்கடுத்து, அசீம், கதிரவன், ADK, ஜனனி, ஆயிஷா உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் இருந்தனர்.

ADK thuglife comment on kitchen clash bigg boss 6 tamil

இதில், அசீம், ADK, கதிரவன் உள்ளிட்டோர் Save செய்யப்பட்டதாக கமல் அறிவிக்கவே, கடைசியில் ஜனனி மற்றும் ஆயிஷா ஆகிய இருவரும் இருந்தனர். அப்போது யார் வீட்டில் இருந்து வெளியேறுவார் என சக போட்டியாளர்களிடம் கமல்ஹாசன் கேட்க, அனைவருமே ஆயிஷா பெயரை தான் தெரிவித்தனர். இறுதியில் ஜனனி Save ஆவதாக அறிவித்த கமல் ஆயிஷா எலிமினேட் ஆவதாக கார்டில் பெயரை காட்டி அறிவிக்க, ஆயிஷா வெளியேறினார்.

ADK thuglife comment on kitchen clash bigg boss 6 tamil

இதனை தொடர்ந்து அடுத்த வார நாமினேஷன் ப்ராசஸ் வந்துவிட்டது. இதில் மைனா, அமுதவாணன், விக்ரமன் ஆகியோர் மணிகண்டனை நாமினேட் செய்துள்ளனர். இதேபோல் ரச்சிதா, மணிகண்டன் தனலட்சுமி ஆகியோர் விக்ரமனையும், ஏடிகே மற்றும் அசீம் ரச்சிதாவை நாமினேட் செய்துள்ளனர். ஷிவின், கதிரவன், ஏடிகே மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசீமை நாமினேட் செய்துள்ளனர். இதனிடையே இந்த வார கேப்டன்சி டாஸ்கில் மைனா ஜெயித்துள்ளார்.

ADK thuglife comment on kitchen clash bigg boss 6 tamil

இதில்தான் நேற்று வாரத்தின் முதல் நாளே கிச்சன் டீமில் சண்டை முளைத்தது. தனலட்சுமிக்கு ஷிவினுக்குமான இந்த சண்டை பழைய சரஸ்வதி சபதம் படத்தில் வரும் கல்வியா செல்வமா ரேஞ்சுக்கு போகவில்லை என்றாலும், தோசையா, சோறா என்கிற அளவில் செம்ம கலாட்டாவாக நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த ஏடிகே பேசிய வசனமதான் ட்ரெண்ட் ஆகியுள்ளது, ஆம், கடந்த வாரங்களில் கிச்சன் டீமில் ஆண்கள் சமைத்துக் கொண்டிருந்தனர்.

முன்னதாக கிச்சன் டீமில் சமைப்பவர்கள் எல்லாம் நாமினேஷன்லயே வருவதில்லை. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கூடாரம் என தனலட்சுமி நங்கூரம் போட, அப்போது கமல்ஹாசன், இது பழிவாங்கலா? அல்லது உரிமைக்குரலா? என சூழ்ச்சமத்தை கண்டுபிடிக்கும் வகையில் ஒரு கேள்வியை கொக்கியாக போட்டார். இருப்பினும் தனா சொன்னதில் உண்மையும் நியாமமும் இல்லாமல் இல்லை என்று விளக்கிய கமல், அதை ஃபிக்ஸ் பண்ண சொல்லி கறாராக சொல்லி இருந்தார். அதன்படி என்னவோ கடந்த வாரம் ஆண்களை சமைக்கக் கூடிய சூழல் இயல்பாகவே அமைந்தது.

ADK thuglife comment on kitchen clash bigg boss 6 tamil

இந்நிலையில் தான் மீண்டும் தனா, ஷிவின் சண்டையை கிச்சனில் பார்த்த ஏடிகே,  “போன வாரம் நாலு ஆம்பளைங்க சேர்ந்து சமைச்சோமே... ஒரு சின்ன சத்தமாவது வந்துதா.. சொல்லுங்க தெய்வமே.. சொல்லுங்க?” என்கிற தொனியில் கேட்டதும் ரசிகர்கள் வெடித்து சிரித்துவிட்டனர். சபாஷ் கேட்டாரு பாருங்க கேள்வி என்று ஏடிகேவின் பேச்சுக்கு சப்போர்ட் பண்ணியதுடன், “அதுவும் கிச்சன் டீமில் எவ்வளவு தைரியமா போய் உண்மையை சொல்றாரு மனுசன்” மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Also Read | புதிய படத்துக்காக முதல் முறை கைகோர்க்கும் GV பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ்.!

தொடர்புடைய இணைப்புகள்

ADK thuglife comment on kitchen clash bigg boss 6 tamil

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil will find this news story useful.