www.garudabazaar.com

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த தன் ‘லவ்லி’ மகளுடன் ராபர்ட் .. நெகிழ்ச்சி ஃபோட்டோஸ்..! Bigg boss 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.

robert and queency met after elimination bigg boss 6 tamil

Also Read | Baba : ரஜினிகாந்தின் பாபா ரீ ரிலீஸ் ... வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றிய லைகா நிறுவனம்..!

பொம்மை டாஸ்க், அரசவை டாஸ்க், அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க், பழங்குடி வெர்சஸ் ஏலியன் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களிடையே நிறைய வலுவான போட்டிகளும் அவ்வபோது சண்டை சச்சரவுகளும்  நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருக்கின்றன.

முன்னதாக இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி மற்றும் வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி பங்கேற்றனர்.

robert and queency met after elimination bigg boss 6 tamil

இவர்களுள் ஜிபி முத்து முதலிலேயே சில காரணங்களால், வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி, பின்னர் அசல், ஷெரீனா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேற்றப்பட்டனர்.  அண்மையில் குயின்ஸியும் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். இந்நிலையில் ராபர்ட் மாஸ்டரும் குயின்ஸியும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான குயின்ஸி பதிவிட்டுள்ள Post வைரலாகி வருகிறது.

முன்னதாக எலிமினேஷனின் போது ராபர்ட்டை கமல்ஹாசன் வரவேற்றதுடன், “உள்ளே இருந்த அனுபவம் எப்படி இருந்தது?” என கேட்டார். அதற்கு ராபர்ட் மாஸ்டரோ, “அய்யயோ.. வேற லெவல் அனுபவம். உள்ள இருந்து பார்த்தா தெரியும். சுத்தி எல்லாம் நரிக்கூட்டம்” என்று கூறினார். அப்போது கமல், ‘உள்ள எல்லாரும் ஃப்ரண்ட்ஸ்னு சொன்னீங்க?’ என்று கேட்க, அதற்கு ராபர்ட் மாஸ்டரோ, ‘நண்பர்னா அது அமுதவாணனை சொல்லலாம். அப்றம். என் மகள் குயின்சி.. அவ்வளவுதான்’ என்று கூறினார்.

robert and queency met after elimination bigg boss 6 tamil

இதனை தொடர்ந்து Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்த ராபர்ட் மாஸ்டர்,   “பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றது நல்ல உறவுகளுக்காகதான், அந்த வகையில் குயின்ஸி எனும் மகள் கிடைத்துள்ளாள்.” என குறிப்பிட்ட்டிருந்தார். இந்நிலையில்தான்  “மை லவ்லி மகள்” என்று ராபர்ட் கோணத்தில் எழுதப்பட்ட கேக்கை பதிவிட்டு குயின்ஸி போஸ்ட் போட்டிருக்கிறார். அத்துடன் ராபர்ட் மாஸ்டரும் குயின்ஸியும் இடம்பெறும் ஃபோட்டோவையும் குயின்ஸி பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவருக்குமே ரசிகர்கள் தங்கள் அன்பை தெரிவித்து வருகின்றனர்.

Also Read | “அழகான காதல் கதை”.. மாமனிதனை தொடர்ந்து ‘மெஹந்தி சர்க்கஸ்’ ஹீரோவை இயக்கும் சீனு ராமசாமி..!

தொடர்புடைய இணைப்புகள்

robert and queency met after elimination bigg boss 6 tamil

People looking for online information on Bigg boss, Bigg boss 6 tamil, Bigg boss tami, Queency, Robert will find this news story useful.