www.garudabazaar.com

இந்த வார BiggBoss-ல் Eliminate ஆன போட்டியாளர்.. புதுமையான Task மூலம் அறிவித்த கமல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் எலிமினேசனை கமல் அறிவித்துள்ளார்.

Bigg Boss 6 Tamil Queency Eliminated Kamal announced

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு நிறைந்தும் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் இதனை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

அதே போல, பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டாஸ்க் அரங்கேறி வருகிறது. அது மட்டுமில்லாமல், இந்த டாஸ்க்கின் பெயரில் ஏராளமான பஞ்சாயத்து பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது

பொம்மை டாஸ்க், அரசவை, அருங்காட்சியகம் டாஸ்க், கோர்ட் டாஸ்க், ஏலியன் பழங்குடியினர் டாஸ்க் என அனைத்து டாஸ்க்கிலும் பல போட்டியாளர்களுக்கு இடையே நிறைய சண்டைகளும் நடந்து அதிக பரபரப்பை பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படுத்தி இருந்தது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள்  பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் எலிமினேசன் ஆவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது. ஜனனி, மைனா நந்தினி, குயின்ஸி ஆகிய மூவருக்கும் மூன்று பெட்டிகள் கொடுக்கப்பட்டு, மூன்று சாவிகள் கொடுக்கப்பட்டன. மூவரில் யாரேனும் ஒருவரது பெயர், திறக்கப்படும் அந்த பெட்டியில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் மூன்று பெட்டியும் திறக்காமல் போனதால் எலிமினேசன் இல்லை என்று கருதிய போட்டியாளர்கள் முதலில் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் கமல் குறுக்கிட்டு விக்ரமனை பெட்டியை திறக்க வைத்தார். அதில் குயின்ஸியின் பெயர் இருந்தது. இதனால் குயின்ஸி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக எலிமினேட் ஆனார்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 6 Tamil Queency Eliminated Kamal announced

People looking for online information on BIGGBOSS Season 6 Tamil, BIGGBOSS TAMIL, Kamal Haasan will find this news story useful.