www.garudabazaar.com

TRENDING: "தளபதி 67" தீபாவளி ரிலீஸா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Lokesh Kanagaraj Answer about Thalapathy 67 diwali release

Also Read | THUNIVU: கனடா, ஆஸி & நியூசி. தியேட்டர் ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்கள்!

இளைய தளபதி & தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Lokesh Kanagaraj Answer about Thalapathy 67 diwali release

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lokesh Kanagaraj Answer about Thalapathy 67 diwali release

இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.  சமீபத்தில் 'ஜில் ஜங் ஜக்' இயக்குனர் தீரஜ், இணை எழுத்தாளராக 'தளபதி 67' படத்தில் இணைந்துள்ளார்.

Lokesh Kanagaraj Answer about Thalapathy 67 diwali release

இந்நிலையில் லத்தி படத்தின் விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர்.  குறிப்பாக தளபதி 67 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், "படத்தின் நடிகர்கள் & படக்குழு இறுதி செய்யப்பட்டு விட்டது. வாரிசு படம் ரிலீஸ் ஆனதும் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியாகும். தீபாவளி ரிலீஸ் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆரம்ப கட்ட பணிகள் தான் துவங்கி உள்ளது." என லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

Also Read | செம்ம டான்ஸ்.. ரஞ்சிதமே பாட்டுக்கு நடனமாடி அசத்திய குயின்ஸி & ஷெரினா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Answer about Thalapathy 67 diwali release

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy 67 will find this news story useful.