www.garudabazaar.com

செம்ம டான்ஸ்.. ரஞ்சிதமே பாட்டுக்கு நடனமாடி அசத்திய குயின்ஸி & ஷெரினா! வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் குயின்ஸி & ஷெரினா நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

BIGGBOSS Sheriina Queency Dancing for VARISU Ranjithame Song

Also Read | THUNIVU: கனடா, ஆஸி & நியூசி. தியேட்டர் ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்கள்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

BIGGBOSS Sheriina Queency Dancing for VARISU Ranjithame Song

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார்.

BIGGBOSS Sheriina Queency Dancing for VARISU Ranjithame Song

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் 90 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில் இந்த பாடலுக்கு பிக்பாஸ் பிரபலங்கள் குயின்ஸி & ஷெரினா நடனமாடும் வீடியோ காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷெரினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sheriina (@sheriina_21)

Also Read | அந்த மனசு தான் சார் கடவுள்.. மாற்றுத்திறனாளி ரசிகரை கையில் தூக்கி வைத்து போட்டோ எடுத்த விஜய்!

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Sheriina Queency Dancing for VARISU Ranjithame Song

People looking for online information on BIGGBOSS Queency, BIGGBOSS Sherina, Queency, Sherina, Sherina Queency Dance Ranjithame song, Varisu, Varisu Ranjithame Song, Vijay will find this news story useful.