’இந்தியன் 2’ சேனாபதி இனி கொஞ்ச நாளுக்கு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் கமலை வைத்து எடுக்கும் படம் இந்தியன் 2.  லைக்கா புரடக்‌ஷன்சின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத், பாபி சிம்ஹா என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே உள்ளது. ரத்னவேல் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Kamal Haasan enters Shankar Indian 2 shoot tight schedule for 35 days

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது ஈவிஎம் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 13ம் தேதி கமல் இப்படத்தின் நான்காவது ஷெட்யூலில் இணைய உள்ளார்.  அதற்குள் கமல் இல்லாத காட்சிகளை ’இந்தியன் 2’ டீம் விறுவிறுப்பாக முடித்து வருகின்றனர்.

கமல் வந்த பிறகு 13ம் தேதி முதல் 35 நாட்கள் ஷூட் முழுவீச்சில் நடைபெற உள்ளது. இது முடிந்த கையோடு ’இந்தியன் 2’ டீம் வெளிநாடு பறக்கிறது. காஜல் அகர்வால் கடந்த சனிக்கிழமை இந்த ஷூட்டில் இணைந்துள்ளார்.

Entertainment sub editor