'மாஸ்டர்' படப்பிடிப்பு தளபதியை காண குவிந்த ரசிகர்கள் - விஜய் எடுத்துக்கொண்ட செல்ஃபி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்எல்சியில் நடைபெற்று வருகிறது. அங்கே இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என பாஜவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக செய்திகள் வெளியானது.

Thalapathy Vijay meets his fans in Vijay Sethupathi, Lokesh Kanagaraj's Master Shooting Spot

இதனையடுத்து அங்கே விஜய்யை காண்பதற்காக அவரது ரசிகர்கள், வேன்களில் படையெடுத்து வந்தனர்.  இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்த விஜய் வேன் ஒன்றின் மீது நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். பின்னர், அங்கிருந்த படி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்தார்.

முன்னதாக அங்கு விஜய், ரசிகர்களின் முன்பு உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அங்கிருந்து சில நிமிடங்களில் புறப்பட்டு சென்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்பதற்காக ஆவலாக இருப்பதாக பிரபலங்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Entertainment sub editor