www.garudavega.com

''எங்க வீட்டுல வேலை செய்யுற யுவஶ்ரீதான்..'' - பணிப்பெண்ணுக்கு பெருமை சேர்த்த ஷாந்தனு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகர் ஷாந்தனு பகிர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் | vijay's master actor shanthnu praises his home live in maid on his recent kokanaka video

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் ஷாந்தனு. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனிடையே தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால், வீட்டுக்குள் இருந்தபடி, கொஞ்சம் கொரோனா நிறைய காதல் எனும் ஷார்ட் ஃபிலிமை அவர் ரிலீஸ் செய்தார். இதற்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. 

இதனிடையே நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சூப்பர் பதிவை வெளியிட்டுள்ளார். அவரது வீட்டு பணிப்பெண்ணாக இருக்கும் யுவஶ்ரீயுடன், ஷாந்தனுவும் அவர் மனைவியும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, ''எங்க குறும்படத்தின் கேமரா வுமன் இவர்தான். யுவஶ்ரீ எங்கள் வீட்டில் தங்கியிருந்து பணிப்பெண்ணாக வேலை பார்ப்பவர். நமக்கு தெரியாத, பல திறமைகள் இங்கு இருக்கிறது. அதை நாம் சரியாக அடையாளம் காணவேண்டும்'' என பதிவிட்டு, தனது வீட்டு பணிப்பெண் யுவஶ்ரீக்கு பெருமை சேர்த்துள்ளார்கள் ஷாந்தனுவும் அவரது மனைவியும். ஷாந்தனுவின் இந்த பதிவு ரசிகர்களின் லைக்ஸை குவித்து வருகிறது. 

 

Entertainment sub editor