தளபதி விஜய் - விஜய் சேதுபதியின் மாஸ்டர் - அனிருத் முக்கிய அறிவிப்பு - ''பயங்கரமா வருது...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் தவிர்த்து போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் கடந்த மே 11 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

Anirudh Speaks about Thalapathy Vijay, Vijay Sethupathi's Master | தளபதி விஜய்யின் மாஸ்டர் குறித்து அனிருத் முக்கிய தகவல்

இந்நிலையில் 'மாஸ்டர்' படத்தின் எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்திருந்தார்.  இதனையடுத்து இந்த படத்தின் டிரெய்லர் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் நடிகர் அர்ஜூன் தாஸ் தனது டிரெய்லர் குறித்து பேசியதாவது, "மாஸ்டர் டிரெய்லரை இதுவரை 6 முறை பார்த்துவிட்டேன். தளபதி பேசும் அந்த ஒரு டயலாக் வரும்பொழுது மக்களின் ரியாக்ஷன் என்னவாக இருக்கப் போகிறது என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

காத்திருந்தாலும் அதற்கேற்ற பலனை மாஸ்டர் டிரெய்லர் கொடுக்கும். படம் ரிலீஸுக்கு முன்பாக ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும். சரியான நேரத்தில் படக்குழு அதனை ரிலீஸ் செய்வார்கள் என்று நினைக்கிறேன்" என்று தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இந்த படம் குறித்து லேட்டஸ் அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளார். அதில், லோகேஷ் கனகராஜ் எடிட்டிங் ஸ்டார் பண்ணிட்டாரு. நான் ரீரெக்கார்டிங் ஸ்டார்ட் பண்ணிட்டேன். வீட்லயே செட்டப் இருக்கிறதுனால வீட்டிலேயே பண்ணிட்டேன். 

ரிலீஸ் டேட் பற்றி தயாரிப்பாளர்கள் முடிவு செய்வார்கள். படம் எப்பொழுது வருதோ பயங்கரமா வரும். விஜய் சார் கிட்ட பேசுனேன். சார் எப்பொழுதுமே பிஸியாக  இருப்பாங்க. எல்லாருக்குமே இந்த நேரம் அப்படி தான் இருக்கு. அனைவரும் இந்த படம் சீக்கிரம் வெளியாக காத்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

தளபதி விஜய் - விஜய் சேதுபதியின் மாஸ்டர் - அனிருத் முக்கிய அறிவிப்பு - ''பயங்கரமா வருது...'' வீடியோ

Entertainment sub editor