விஜய்யின் மாஸ்டர் பாட்டுக்கு மாநகரம் ஹீரோ பண்ண டிக்டாக் வீடியோ. 'இது வேற லெவல் டான்ஸ்ப்பா..'
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சந்தீப் கிஷன் வெளியிட்டுள்ள புதிய டிக்டாக் வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஷாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஹிட் அடித்துள்ளது. மேலும் மாஸ்டர் பட பாடல்களுக்கு, ரசிகர்கள் தொடர்ந்து டிக்டாக் வீடியோக்களை எடுத்து, இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் யாருடா மகேஷ், மாநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்த சந்தீப் கிஷன், மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். வாத்தி கம்மிங் எனும் பாடலுக்கு அவர் புருவங்களை ஆட்டியபடி செய்திருக்கும் டிக்டாக் வீடியோ, ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலை பல முறை ரிப்பீட்டில் கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
The Super cute #VaathiComing Eyebrow Dance By the energetic @sundeepkishan going viral on #TikTok now !! #Master #Thalapathy#Maanagaram pic.twitter.com/7m8bDTz8LI
— Ramesh Bala (@rameshlaus) May 18, 2020