www.garudabazaar.com

"என் முதல் தெலுங்கு படத்துல அவர்தான் முதல் AD".. வாரிசு இசை நிகழ்வுக்கு த்ரிஷா வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார்.

Trisha Wishes for Vijay Vamsi Paidipally Varisu Audio Launch

இதற்கு அடுத்தபடியாக, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்திலும் விஜய் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Trisha Wishes for Vijay Vamsi Paidipally Varisu Audio Launch

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வினை பிக்பாஸ் ராஜூ மற்றும் விஜே ரம்யா தொகுத்து வழங்குகின்றனர்.

Trisha Wishes for Vijay Vamsi Paidipally Varisu Audio Launch

இந்நிலையில் வாரிசு பட குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை நடிகை திரிஷா தெரிவித்துள்ளார். இது பற்றி பிஹைண்ட்வுட்ஸ் நேர்காணலில் பேசிய நடிகை திரிஷா, "வாரிசு டீமுக்கு வாழ்த்துக்கள். எனக்கு அங்க எல்லாரையும் நல்லா தெரியும். வருஷம் தெலுங்குல என்னோட முதல் படம். அதுல முதல் AD-ஆ வம்சி வொர்க் பண்ணாரு. என்னோட ரொம்ப நல்ல ஃப்ரெண்ட். இதுல நிறைய பேர் இருக்காங்கன்னு நினைக்கிறேன். எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள். கண்டிப்பா ஒரு மிகப்பெரிய நிகழ்வா இது இருக்கும்" என கூறி உள்ளார்.

"என் முதல் தெலுங்கு படத்துல அவர்தான் முதல் AD".. வாரிசு இசை நிகழ்வுக்கு த்ரிஷா வாழ்த்து வீடியோ

Trisha Wishes for Vijay Vamsi Paidipally Varisu Audio Launch

People looking for online information on Trisha Vijay, Vamsi Paidipally, Varisu Audio launch will find this news story useful.