www.garudabazaar.com

படப்பிடிப்பில் ஷாக்! பாத்ரூமில் சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகை.. என்ன நடந்தது?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தி சினிமாவில் பிரபல நடிகை துனிஷா சர்மா. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த துனிஷா, பல்வேறு படம் பாலிவுட் படத்தில் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

Actress tunisha sharma dies சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகை.

இவர் தற்போது அலிபாபா தாஸ்தென்- இ- காபுல் எனும் தொடரில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். இந்த சூழலில் மும்பை அருகே உள்ள வசாய் நைகாவ் ராம்தேவ் ஸ்டூடியோவில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தெரிகிறது.

அந்த சமயத்தில் படப்பிடிப்பின் போது மதிய உணவுக்கு இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மேக்கப் அறைக்கு துனிஷா சென்றதாக தகவல்கள் கூறுகின்றது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அறையின் கதவு மூடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்ததாக தகவல்கள் கூறுகின்றது. அங்கே நடிகை துனிஷா சர்மா விபரீத முடிவு எடுத்து இருந்ததைக் கண்டு அனைவரும் பதறிப் போயினர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், துனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நடிகை துனிஷா முடிவு விபரீத முடிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். ஒரு சில தினங்கள் முன்பு கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்த துனிஷா, "இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். அதுவே வாழ்வில் போதும்" என பதிவிட்டிருந்தார்.

Actress tunisha sharma dies சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகை.

இதனைத் தொடர்ந்து இந்த பதிவுக்கு அடுத்தபடியாக, தான் விபரீத முடிவு எடுப்பதற்கு முன்பு, " தங்கள் பேரார்வத்தால் உந்தப்படுபவர்கள் எந்த இடத்திலும் நின்று போக மாட்டார்கள்" என கடைசியாக நடிகை துனிஷா ஷர்மா இன்ஸ்டாகிராம் பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வரும் ஜனவரி 4ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாட இருந்த நடிகை துனிஷா ஷர்மா திடீரென படப்பிடிப்பு தளத்தில் விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தற்போது சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அவரது முன்னாள் காதலர் அவருடன் மிக சமீபத்தில்தான் பிரேக் அப் ஆனதாகவும், இதையடுத்து விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனிதப்பிறவி நிகரற்றது. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Actress tunisha sharma dies சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகை.

People looking for online information on Actress tunisha sharma dies, Tunisha sharma, Tunisha sharma dies will find this news story useful.