www.garudabazaar.com

வாரிசு இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கும் Bigg Boss பிரபலம்! Varisu Audio Launch

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார்.

Vijay Varisu Audio Launch host Bigg Boss Raju Trending

இதற்கு அடுத்தபடியாக, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்திலும் விஜய் நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்வை யார் தொகுத்து வழங்குவார்கள் என்பது குறித்த தகவல்கள் பேசப்பட்டு வந்தன. அந்த வகையில், இந்த நிகழ்வினை பிக்பாஸ் ராஜூ மற்றும் விஜே ரம்யா தொகுத்து வழங்குகின்றனர்.

Vijay Varisu Audio Launch host Bigg Boss Raju Trending

பிக்பாஸ் ராஜூ விஜய் டிவி சீரியல்களில் நடித்தும், ஸ்கிரிப்ட்களில் பணிபுரிந்தும் வந்தார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் டைட்டில் வின்னர் ஆனார். இதேபோல், விஜே ரம்யா பல முன்னணி நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதுடன் ஆடை, சங்கத்தலைவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Audio Launch host Bigg Boss Raju Trending

People looking for online information on Bigg Boss Raju, Trending, Varisu, Varisu Audio launch, Vijay will find this news story useful.