www.garudabazaar.com

நடிகர் விஜயகுமார் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜயகுமார் உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு அவருடைய மகன் நடிகர் அருண் விஜய் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Arun Vijay with His Father Vijaya Kumar Clarification

தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, வில்லனாக மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் விஜயகுமார். எம்.ஜி.ஆர் & சிவாஜி காலத்தில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் விஜய குமார் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருடைய உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "எனது தந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்" என  பதிவிட்டுள்ளார்.

Arun Vijay with His Father Vijaya Kumar Clarification

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் 'யானை' & 'சினம்' ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதேபோல் சோனி லிவ் தளத்தில் தமிழ் ராக்கர்ஸ் சீரிஸூம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது அருண் விஜய் தனது அடுத்த படத்தில் இயக்குனர் A.L விஜய் உடன் இணைந்துள்ளார்.

இந்த புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்றது . ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அருண் விஜய்யுடன் நடிகை எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு "அச்சம் என்பது இல்லையே" என பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமார் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay with His Father Vijaya Kumar Clarification

People looking for online information on Arun Vijay, Vijayakumar will find this news story useful.