www.garudabazaar.com

Varisu : “Audio launch-ல Suprise.. இன்னொரு Song கலக்கியிருக்கோம்.. ” - டிரம்ஸ் சிவமணி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் குறித்து டிரம்ஸ் சிவமணி பேசியுள்ளார். பிரபல இந்திய இசைக் கலைஞரான டிரம்ஸ் சிவமணி,  முன்னதாக சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான ஏ.எம்.ஸ்டுடியோவில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ரீ-ரெக்கார்டிங்கை வாசித்தது குறித்த வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலானது.

Varisu Audio launch Suprise Song Says Drums Sivamani

Also Read | பிரபல பாண்டவர் இல்லம் சீரியல் நடிகையின் வளைகாப்பு.. கணவர் குறித்து நெகிழ்ச்சி பதிவு!

இந்நிலையில் வாரிசு திரைப்பட பாடல்கள் குறித்து பேசியுள்ளார் டிரம்ஸ் சிவமணி. தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர்.

தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Varisu Audio launch Suprise Song Says Drums Sivamani

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வாரிசு படத்தின் முதல் 3 சிங்கிள் பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த 3 பாடல்களை தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதனிடையே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி   நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Varisu Audio launch Suprise Song Says Drums Sivamani

இந்நிலையில் செய்தியாளர்களிடையே பேசிய டிரம்ஸ் சிவமணி, மும்பையின் புகழ்பெற்ற யஷ் ராஜ் ஸ்டுடியோவில் ரெக்கார்டு செய்ய பாடலில் கலக்கியிருப்பதாகவும் தமன் இசையில் சங்கர் மகாதேவன், கார்த்திக் பாடியிருப்பதாகவும், அதில் தான் வாசித்துள்ளதாகவும் இந்த பாடல் ஆடியோ விழாவில் பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே விவேக்.கே கண்ணன் இயக்கத்தில் சன்னி லியோன், ப்ரியாமணி, ஜாக்கி ஷெராப் மற்றும் சாரா நடிக்கும் 'Quotation Gang' படத்தில் மியூசிகல் ஐகான் ட்ரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read | திடீரென தீ விபத்துக்குள்ளான நடிகை கனகா வீடு.! என்ன நடந்தது? முழு தகவல்.!

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Audio launch Suprise Song Says Drums Sivamani

People looking for online information on Drums sivamani, Song, Varisu, Varisu Audio launch will find this news story useful.