www.garudabazaar.com

Varisu : வாரிசு இசை விழா.. சென்னை Airport-ல் ராஷ்மிகாவுக்கு வரவேற்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருந்த 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்திருந்தார்.

Rashmika in Chennai for Varisu Audio Launch pic viral

இதற்கு அடுத்தபடியாக, வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்திலும் விஜய் நடித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Rashmika in Chennai for Varisu Audio Launch pic viral

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

அதே போல, வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று (24.12.2022) நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு இந்த விழா துவங்க உள்ளது. இதில் வாரிசு படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரசிகர்கள் பலரும் அரங்கத்தை சுற்றி தற்போதே கூட ஆரம்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வாரிசு படத்தின் நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்து இறங்கிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது. ரசிகர்களுடன் புகைப்படங்களும் ராஷ்மிகா மந்தனா எடுத்துக் கொண்ட நிலையில், இன்னும் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Rashmika in Chennai for Varisu Audio Launch pic viral

பொதுவாக, விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா என்றால் என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து விஜய் பேசும் பேச்சைக் கேட்கவே உச்சகட்ட எதிர்பார்ப்பு உருவாகும். அப்படி ஒரு சூழலில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எதை பற்றி விஜய் பேச போகிறார் என்பதை அறியவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika in Chennai for Varisu Audio Launch pic viral

People looking for online information on Chennai, Rashmika Mandanna, Varisu, Varisu Audio launch will find this news story useful.