www.garudabazaar.com

அஜித் & விஜய் இருவரின் அடுத்த படங்களிலும் இணைந்த முன்னணி ஹீரோயின்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trisha roped in Both Ajith & Vijay movies deets

Also Read | செம.. சன்னி லியோன் & ப்ரியாமணியின் புதிய படத்துக்கு மியூசிக் யாரு பாருங்க..

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து நடித்துள்ளனர்.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் டிசம்பர் 24 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

வாரிசு படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏற்கனவே லோகேஷ் இயக்கத்தில், மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trisha roped in Both Ajith & Vijay movies deets

அதே போல, மறுபக்கம் நடிகர் அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை H. வினோத் இயக்கி வரும் நிலையில், போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே துணிவு படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி உள்ளதையடுத்து தற்போது மூன்றாவது பாடலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, சிபி, ஜான் கொக்கென், வீரா, அமீர், பாவனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். துணிவு படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 என இன்னும் பெயரிடப்படாத படத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள திரைப்படத்திலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ள திரைப்படத்திலும் பிரபல நடிகை த்ரிஷா நடிக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்.கிடைத்துள்ளது. ஏற்கனவே விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் த்ரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது அஜித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படத்திலும் த்ரிஷா நாயகியாக இணைந்துள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | New Year : ஓவியர், சிற்பி மற்றும் கிராபிடி ஆர்டிஸ்டாக விஜய் சேதுபதி படங்கள் கொண்ட 2023 காலண்டர்..!! Trending

தொடர்புடைய இணைப்புகள்

Trisha roped in Both Ajith & Vijay movies deets

People looking for online information on Ajith Kumar, Trisha, Trisha Krishnan, Vijay will find this news story useful.