www.garudabazaar.com

ராஜா ராணி சீரியலுக்கு புது ஹீரோயின்… விலகிய ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரியா சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Actress riya replaced alya manasa in Raja rani 2

ராஜா ராணி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மெகா தொடர் குடும்பங்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது இரண்டாவது சீசன் 900 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களின் ஆதரவு பெற்ற சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசாவிற்கு சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Actress riya replaced alya manasa in Raja rani 2

சின்ன வயசு கனவும் சரவணனின் நம்பிக்கையும்

கடந்த சில வாரங்களாக இந்த தொடர் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.. தன் கணவன் சரவணனிடம் இதுவரை யாருக்கும் தெரியாத தன்னுடைய வாழ்க்கை லட்சியம் என்ன என்பதைப் பற்றி கூறியுள்ளார். சிறுவயது முதலே சமூகத்தில் நடக்கும் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தானொரு போலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற கனவோடுதான் வாழ்ந்ததாக உணர்ச்சிவசப்பட்டு சொல்லி அழும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதைக் கேட்ட சரவணன் சந்தியாவை மனம் தளரவிடாமல் எப்படியாவது சந்தியாவை போலிஸ் ஆக்குவேன் என்றும் இனிமேல் சந்தியா போலிஸ் ஆவது அவளின் கனவு மட்டும் இல்லை தன்னுடைய கனவும்தான் என்று அவளை ஊக்குவிக்கும் விதமாக பேசினார். இதனால் அடுத்தடுத்த நாட்களில் இடம்பெற்ற எபிசோட்களை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

Actress riya replaced alya manasa in Raja rani 2

போலிஸ் ஆனாரா சந்தியா?

இதனிடையே சந்தியா, 'ஐபிஎஸ்' உடையில் தோற்றமளிக்கும் காட்சிகள் ஷூட்டிங் செட்டில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஆல்யா மானசா. இந்த காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் வரவிருப்பதாக தெரிகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து, “என்னது..? சந்தியா ஐபிஎஸ் ஆகிவிட்டாரா?” என, ஆர்வம் தாளாமல் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

திடீர் மாற்றம்

இந்நிலையில் இப்போது ராஜா ராணி சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ஆல்யா மானசாவிற்குப் பதிலாக ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியலின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்து வந்தார். அவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் தனது பிரசவத்துக்காக இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளதாஜ்க சொல்லப்படுகிறது. இந்நிலையில் சந்தியா கதாபாத்திரத்துக்கு ஆல்யாவுக்கு பதில் ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரியா நடித்துள்ள புதிய ப்ரோமோ காட்சியை விஜய் தொலைக்காட்சி இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ப்ரோமோ காட்சி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Actress riya replaced alya manasa in Raja rani 2

ஆல்யா மானசாவுக்கு வாழ்த்து

சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கும் ஆல்யா தனது பிரசவத்துக்காக சீரியலில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து சீக்கிரம் அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress riya replaced alya manasa in Raja rani 2

People looking for online information on Alya Manasa, Raja Rani 2, Vijay tv will find this news story useful.