RRR Others USA
www.garudabazaar.com

ஓ இப்படியும் Tea போடலாமா….? – வைரல் ஆகும் Raja Rani 2 ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜா ராணி 2 சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

Raja rani 2 serial new promo went viral internet

ராஜா ராணி சீசன் 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி மெகா தொடர் குடும்பங்களின் ஆதரவைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது. முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இப்போது இரண்டாவது சீசன் 950 எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மக்களின் ஆதரவு பெற்ற சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆல்யா மானசாவிற்கு சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Raja rani 2 serial new promo went viral internet

இவருக்குப் பதில் இவர்….

இந்நிலையில் இப்போது ராஜா ராணி சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க ஆல்யா மானசாவிற்குப் பதிலாக ரியா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த சீரியலின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடித்து வந்தார். அவர் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதால் தனது பிரசவத்துக்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். அவருக்கு இப்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் சூட்டியுள்ளதாக தம்பதியினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தியா கதாபாத்திரத்துக்கு ஆல்யாவுக்கு பதில் ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரியா நடித்துள்ள புதிய காட்சிகள் இப்போது கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாக தொடங்கி விட்டன.

பொய் வழக்கில் சரவணன் கைது…

போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் தனது சிறுவயது கனவு என சந்தியா சரவணனிடம் கூற அவனும் அவளை அதற்காக படிக்க சொல்லி நம்பிக்கை ஊட்டுகிறான். ஆனால் சந்தியா குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதற்காக போலீஸ் வேலை வேண்டாம் என்ற முடிவை எடுத்து விடுகிறாள். இந்நிலையில் சரவணனை போலீஸ் பொய் வழக்கில் கைது செய்ததும் சந்தியா போலீஸ் வேலைக்கு படிக்க சம்மதிக்கிறாள்.

Raja rani 2 serial new promo went viral internet

கவனத்தை ஈர்த்த புதிய ப்ரோமோ…

இந்நிலையில் இப்போது இந்த சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள ஒரு அறையில் சந்தியாவுக்கு படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறார் சரவணன். மேலும் படிக்க போகும் சந்தியாவுக்கு டீ போட்டு தருவதாக சொல்ல, அது அத்தைக்கு தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என சந்தியா மறுக்கிறாள். உடனே சரவணன் அந்த அறைக்குள் இருக்கும் புத்தகங்களை வைத்தே அவளுக்கு டீ தயாரிப்பது போல ஆக்‌ஷன் செய்ய, சந்தியா சரவணன் தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்து நெகிழ்ச்சி ஆகிறாள். இது சம்மந்தமான ப்ரோமோ இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Raja rani 2 serial new promo went viral internet

தொடர்புடைய இணைப்புகள்

Raja rani 2 serial new promo went viral internet

People looking for online information on Raja Rani 2, Serial, Vijay tv will find this news story useful.