RRR Others USA
www.garudabazaar.com

”விஜய் பட வாய்ப்பு மட்டும் கெடச்சா…”… தமனின் கனவு நனவாயிடுச்சு - viral video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் தமன் தளபதி 66 படத்துக்கு இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Music director thaman throwback interview went viral now

கண்ணு பட்டுட போகுது…. விஜய்க்கு திருஷ்டி முறித்த ராஷ்மிகா… தளபதி 66 பூஜை viral pics!

தளபதி 66 பூஜை…

விஜய்யின் 65 ஆவது படமான பீஸ்ட் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலையில் தற்போது அவரின் அடுத்த படமான தளபதி 66 படத்தைப் பற்றி அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.  இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. பூஜையில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Onboard நடிகர்கள்….

இந்த படத்தில் பணிபுரிய உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய எந்த விவரமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதுபோல இன்று படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Music director thaman throwback interview went viral now

இசையமைப்பாளராக தமன்…

நேற்று தளபதி 66 படத்தின் இசையமைப்பாளராக எஸ் எஸ் தமன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். தமன் பாய்ஸ் படம் மூலமாக நடிகராக அறிமுகமானவர். அதன் பிறகு இசையமைப்பாளராக தமிழ் மற்றும் தெலுங்கில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.  இதையடுத்து தற்போது முன்னணி நடிகரான விஜய்யின் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர்கள் இருவரும் இணையும் முதல் படமாக தளபதி 66 அமைய உள்ளது.

தமனின் throwback பேட்டி…

Music director thaman throwback interview went viral now

இந்நிலையில் விஜய் படத்தில் பணியாற்றுவது குறித்து இசையமைப்பாளர் தமன் முன்பு பிஹைண்ட்வுட்ஸுக்குக் கொடுத்திருந்த ஒரு நேர்காணல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ’5 வயசுல இருந்து 60 வயசு வர உள்ள எல்லோரும் அவர் பாட்ட கேப்பாங்க… அவரு கூட வொர்க் பண்ற சான்ஸுக்காக காத்திருக்கேன். அவரு பட வாய்ப்பு மட்டும் கெடச்சா அடிச்சு எல்லாத்தயும் அடிச்சு ஒடச்சுடுவோம்… விஜய்யின் மேனேஜர் அடிக்கடி போன் பண்ணி பேசுவார். நான் ’அவரிடம் படம் குடுங்க தலைவா… அவர் மேல உள்ள லவ்வ நான் எப்படி காட்டுறது தலைவா… ஒரு படம் கொடுத்தாதான் அத என்னால ப்ரூவ் பண்ணமுடியும்’ எனக் கூறினேன். விஜய் சாரை சந்தித்தபோதும் அவரும் என்னிடம் ‘தமன் கண்டிப்பா நாம வொர்க் பண்றோம்’ எனக் கூறினார். ’ என அந்த பேட்டியில் கூறியுள்ளார். அவரின் கனவு இப்போது தளபதி 66 படத்தின் மூலமாக நிறைவேறியுள்ளது.

தமனின் இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவில் தமனுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

 

‘வாத்தி’ இயக்குனருக்கு வாழ்த்து –ஸ்கூல் பையன் கெட்டப்பில் தனுஷின் viral pic!

 

தொடர்புடைய இணைப்புகள்

Music director thaman throwback interview went viral now

People looking for online information on Music Director Thaman, SS Thaman, Thalapathy 66, Thaman throwback interview, Vijay will find this news story useful.